×

கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

 

கோவை, ஆக. 23: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சத்தியவாணிமுத்து அம்மையர் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் மகளிர் ஊர்நல அலுவலர், சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யாமல், இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 6 மாத கால தையற்பயிற்சி முடித்த 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இ-சேவை மூலம் விண்ணப்பிக்கும் போது வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, தையற்பயிற்சி முடித்த சான்று, சாதிச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore District Court ,Coimbatore ,Sathyavanimuthu Ammaiyar ,Department of Social Welfare and Women's Rights ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...