×

பஸ் கண்ணாடி உடைப்பு

 

குறிஞ்சிப்பாடி, ஆக. 23: குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அருகே உள்ள வல்லியம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சவுந்தர்ராஜன் (38). தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி பேருந்தை ஓட்டிக்கொண்டு வந்தார். அந்த பேருந்து குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியபோது, அதே ஊரைச் சேர்ந்த தனசேகரன் மகன் பிரேம்குமார் (23) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பேருந்தை வழிமறித்து எங்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்த மாட்டீர்களா என்று கூறி திட்டி கற்களை வீசி தாக்கினர்.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணி தனலட்சுமி, பிரவீன், கண்டக்டர் அய்யப்பன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டிரைவர் சவுந்தர்ராஜன் கொடுத்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்

The post பஸ் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kurinchipadi ,Virudhachalam… ,
× RELATED கடலூர்-விருத்தாசலம்-சேலம் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரம்