×

தலையாரி குடிக்காடு கிராமத்தில் மாடுகளுக்கு தோல்கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

அரியலூர், ஆக.23:அரியலூர் மாவட்டம், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரி குடிக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது.முகாமை கடுகூர் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் முன்னிலையில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 99 மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியை செலுத்தினர். முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோல் கழலை நோய் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

The post தலையாரி குடிக்காடு கிராமத்தில் மாடுகளுக்கு தோல்கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Thaliyari Bukkadu ,Ariyalur ,Talaiyari Uddikadu ,Kadukur Panchayat ,Ariyalur district ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்