×

அமைச்சர் துரைமுருகன் பேச்சு பலர் விடும் சாபம் பாஜ ஆட்சியை ஒழிக்கும்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திமுக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நீட் தேர்வு என்ற கொடிய சட்டத்தை மாணவர்கள் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக நீண்ட நாட்களாக போராடி வருகிறது. மாணவர்களும் இதை எதிர்த்து தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதற்கு முன்பு திமுகவில் பல பேர் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் விட்டனர். அந்த வழியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர்.

ஆனால், அதைப் பற்றி மத்தியில் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. வரலாற்றை பார்த்தால் இந்தியை திணித்த ஆட்சி ஒழிந்தது. அதைபோல் நீட்டை எதிர்த்து பலர் விடுகிற சாபம் ஆட்சியை ஒழித்து விடும். இன்று நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி, நீட்டை ஒழித்துகட்டும் வரை இளைய சமுதாயம் ஓயாது என சபதம் எடுத்துள்ளார். இந்த அறப்போராட்டத்தை பொறுத்தவரை ஏதோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம் என்று இல்லாமல் பல தொடர் போராட்டங்களை அமைச்சர் உதயநிதி அறிவிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

The post அமைச்சர் துரைமுருகன் பேச்சு பலர் விடும் சாபம் பாஜ ஆட்சியை ஒழிக்கும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Durai Murugan ,BJP ,Chennai ,DMK ,Chennai's Valluvar constituency ,Duraimurugan ,NEET ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...