×

சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிரங்கும்: இஸ்ரோ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிரங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி மதியம் 2.35 மணி 17 வினாடிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும். நிலவில் தரையிரங்கிய பின்னர், நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் முக்கிய பணி கடந்த 5ம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்ற தொடங்கிது. சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து விசை கலன் மற்றும் லேண்டர் கடந்த 17ம் தேதி தனியாக பிரிக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து உந்து விசை கலன் மற்றும் லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிரங்கும் நேரம் 19 நிமிடங்கள் தாமதமாகியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வருகிற 23ம் தேதி சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது. முன்னதாக 17.45 மணி நேரத்தில் நிலவில் தரயிரங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 19 நிமிடம் தாமதமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிரங்கும்: இஸ்ரோ அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Srihrikotta ,Lander ,Moon ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...