×

திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை சாலையின் நடுவே நடமாடியது.

அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை கண்டு அச்சமடைந்தனர். சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் சிறுத்தை நடமாட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். திம்பம் மலைப்பாதை சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thimbam hillside ,Sathyamangalam ,Erode District ,Sathyamangalam Tigers Archive ,Tamil Nadu ,Karnataka ,Mysore ,
× RELATED பள்ளியில் நுழைந்து மிரட்டிய பாஜ நிர்வாகிகள் 7 பேருக்கு வலை