×

புதுக்கோட்டையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

புதுக்கோட்டை, ஆக.19: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நேற்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆண்டு தோறும் ஆகஸ்ட் 20ம் நாள் ‘நல்லிணக்க நாளாக” அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் நாளை (20ம்தேதி) விடுமுறை தினம் என்பதால், இன்றையதினம் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நல்லிணக்க நாள் உறுதிமொழியான, ‘நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்” என்ற உறுதிமொழியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாசித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post புதுக்கோட்டையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Reconciliation Day ,Pudukottai ,District Collector ,Mercy Ramya ,Dinakaran ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...