×

நீதிமன்ற உத்தரவு படிதான் நடக்கிறது `இந்தியா’ கூட்டணிக்கும் காவிரியில் நீர் திறப்புக்கும் தொடர்பில்லை: கர்நாடக துணை முதல்வர் விளக்கம்

பெங்களூரு: `இந்தியா’ கூட்டணிக்கும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதற்கும் தொடர்பில்லை என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். துணைமுதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி கே சிவகுமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மாநில அணைகளில் போதிய நீர் இல்லாமல் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வரும் தண்ணீரை நிறுத்த அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் உரிய மனு தாக்கல் விரைவில் செய்யப்படும்.

அதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பாஜ மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், காங்கிரஸ் அரசு நீர் வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டி அரசியல் செய்து வருகிறார்கள். இந்தியா கூட்டணிக்கும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துள்ளதற்கும் துளியும் சம்மந்தமில்லை. நீதிமன்ற உத்தரவை மதித்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டப்படும் என்றார்.

The post நீதிமன்ற உத்தரவு படிதான் நடக்கிறது `இந்தியா’ கூட்டணிக்கும் காவிரியில் நீர் திறப்புக்கும் தொடர்பில்லை: கர்நாடக துணை முதல்வர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,alliance ,Cauvery ,Karnataka ,Deputy Chief Minister ,Bengaluru ,D.K.Sivakumar ,India' alliance ,Tamil Nadu ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை