×

₹5 லட்சம் மதிப்பு 20 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன

திருவண்ணாமலை, ஆக.17: திருவண்ணாமலை மாவட்டத்தில், தவறவிட்ட மற்றும் திருட்டுபோன ₹5 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்களை மீட்டு, உரியவர்களிடம் எஸ்பி கார்த்திகேயன் ஒப்படைத்தார். தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்துள்ள நிலையில், செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகமாகும் அதேநேரத்தில் செல்ேபான்களை தவறவிடுவதும், திருட்டுபோவதும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், தொலைந்து போன மற்றும் திருட்டுபோன செல்போன்கள் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் அனைத்தும், மாவட்ட சைபர் கிரைம் ேபாலீஸ் மூலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பழனி தலைமையிலான குழுவினர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில், காணாமல் போன செல்போன்களின் ஐஎம்இஐ எனப்படும் சர்வதேச செல்போன் உற்பத்தி அடையாள எண்ணை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட செல்போனில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு எண், செல்போன் டவர் போன்றவற்றின் துணையுடன் காணாமல் போன செல்போன்கள் கண்டறியப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் ₹25 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ₹5 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதையொட்டி, செல்போன்களுக்கு உரியவர்களை நேரில் திருண்ணாமலை எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் செல்போன்களை எஸ்பி கார்த்திகேயன் வழங்கினார். அப்போது, சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், செல்போன்களுக்கு வரும் அவசியமற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ஓடிபி எண்களையும், ரகசிய எண்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும் எஸ்பி கேட்டுக்கொண்டார். அப்போது, சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ₹5 லட்சம் மதிப்பு 20 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன appeared first on Dinakaran.

Tags : SP ,Thiruvannamalai district ,Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி