×

நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு :கவிஞர் வைரமுத்து

சென்னை : நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதில் மாணவன் சின்னத்துரை, மாணவி சந்திராசெல்வி படுகாயம் அடைந்தனர். அண்ணன், தங்கையான இருவரும் நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டு

சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது

சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!

முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்
சட்டமாக்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

The post நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு :கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Poet Vairamuthu ,Chennai ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...