×

2 முறை நீட் தேர்வில் தோல்வியால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 

தாம்பரம், ஆக. 14: குரோம்பேட்டையில் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கில் தொங்கி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் போட்டோகிராபர் செல்வம். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சிபிஎஸ்இ பிரிவில் பிளஸ் 2 படித்த ஜெகதீஸ்வரனுக்கு மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2 வருடமாக அவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் இரண்டு முறையும் அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன், சில நாட்களாக தனது தந்தையிடம் புலம்பிக்கொண்டு இருந்துள்ளார். தந்தை செல்வம் ஜெகதீஸ்வரனுக்கு ஆறுதல் கூறியும், மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெகதீஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படிக்கும் அறையில் வேட்டியால் தூக்கு மாட்டிக் கொண்டார். மாலையில் வீட்டு வேலை செய்வதற்காக வந்த மூதாட்டி தூக்கில் தொங்கியபடி இருந்த ஜெகதீஸ்வரனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து செல்வத்திற்கு அவர் தகவல் அளித்தார்.
பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த செல்வம் ஜெகதீஸ்வரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடலை கைப்பற்றிய சிட்லப்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது முறையாக எழுதிய நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post 2 முறை நீட் தேர்வில் தோல்வியால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Krombettai ,Dinakaran ,
× RELATED குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர்...