×

மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த தேசிய கொடிகள் விற்பனை சங்கரன்கோவிலில் துவக்கம்

 

சங்கரன்கோவில், ஆக.14: தென்காசி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த தேசிய கொடிகள் விற்பனை சங்கரன்கோவில் வட்டார இயக்க வேளாண் அலுவலகத்தில் துவங்கியது. தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுய உதவி குழு பெண்களால் பத்துக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் கூடங்கள் மூலம் சுமார் 1 லட்சம் தேசிய கொடிகளை தயாரித்துள்ளனர். இதில் சிறிய அளவுடைய தேசியக்கொடி ரூ.15க்கும், பெரிய அளவுடைய தேசியக்கொடி ரூ.20க்கும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளனர். கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பாரத மாதா மெகா கிளஸ்டர் மூலம் சுய உதவி குழு பெண்களால் 3 லட்சம் தேசியக்கொடிகள் குறுகிய நாட்களுக்குள் தைக்கபட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஒரு லட்சம் தேசிய கொடிகள் தயாரித்து விற்பனை செய்ய உள்ளனர். இதற்காக சங்கரன்கோவில் வட்டார இயக்க வேளாண் அலுவலகத்தில் வைத்து பாரதமாதா மெகா கிளஸ்டர் தலைவி இந்துஜா, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் சிவக்குமார், தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடி விற்பனையை துவக்கிவைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் தேசியக்கொடியை தயாரிப்பதன் மூலம் சுய உதவிக் குழு பயனடைவதாகவும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிப்பதாக தெரிவித்தனர்.

The post மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த தேசிய கொடிகள் விற்பனை சங்கரன்கோவிலில் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Shankaran Temple ,Sankarankoil ,Tenkasi district ,Sankarankoil district ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு