×

முழு தொகை செலுத்தியவர்கள் வீட்டு வசதி வாரியத்தில் கிரயப்பத்திரம் பெற்று கொள்ளலாம்

 

ஈரோடு, ஆக.13: வீட்டு வசதி வாரியத்தில் முழு தொகை செலுத்திய ஒதுக்கீட்டுதாரர்கள் கிரயப்பத்திரம் பெற்று கொள்ளலாம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட பிரிவில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று, அதற்கான முழு தொகை செலுத்தியவர்களுக்கான கிரய பத்திரம் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று, முழு தொகையை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரய பத்திரம் வழங்கினார்.

அப்போது, அமைச்சர் கூறுகையில்,‘‘வீட்டு வசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று முழு தொகையும் செலுத்திய ஒதுக்கீட்டாளர்கள் ஈரோடு வீட்டு வசதி பிரிவை அணுகி உடனடியாக கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார். மேலும், விவரங்களுக்கு ஈரோடு சம்பத் நகர், தியாகி குமரன் சாலையில் உள்ள ஈரோடு வீட்டு வசதி பிரிவின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரிலோ அல்லது 0424-2258664 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post முழு தொகை செலுத்தியவர்கள் வீட்டு வசதி வாரியத்தில் கிரயப்பத்திரம் பெற்று கொள்ளலாம் appeared first on Dinakaran.

Tags : Housing Board ,Erode ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது