×

தேனி நகராட்சி அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக. 13: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் துறை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வட்ட கிளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் அங்கன்வாடி ஊழியர்கள் ஊராட்சி எழுத்தர்கள் கிராம காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை களைந்து செலவில்லா மருத்துவ வசதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனி நகராட்சி அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni Municipal Office ,Theni ,Theni Allinagaram Municipal Office ,Dinakaran ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு