×

ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மின் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

 

நீடாமங்கலம், ஜூன் 16: நீடாமங்கலத்தில் இருந்து தஞ்சை சாலையில் மேம்பால சாலை பணி நடைபெறும் இடங்களில் மின் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து தஞ்சை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி கட்டுமான பணி பெட்ரோல் பங் எதிரிலும்,ஒரத்தூர் திருவள்ளுவர் நகர் எதிரே இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. இந்த இடங்களில் சாலை பணி தொடங்கும் முன் மின் கம்பங்களில் லைட் எரிந்து கொண்டிருந்தது.அந்த இடங்களில் மின் வசதி இருந்ததும் இந்த இடங்களில் திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது.

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மின்சாரம் இல்லாததாலும் பெரிய வாகனங்கள், பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் பொழுது புழுதி ஏற்பட்டு கண்ணில் பட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு இடத்தை பார்வையிட்டு மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

The post ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மின் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Thanjavur road ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED தென்கரை வாயல் அரசு பள்ளியில்...