×

பழநியாண்டவர் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடக்கம்

பழநி, ஆக. 11: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாமாண்டு மாணவர் சோக்கை நடைபெற உள்ளது. அரசு உதவிபெறும் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இந்திய பண்பாடு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் சுயநிதி பாடப்பிரிவில் வணிகவியல் (கணினி பயன்பாடு), கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு www.apacac.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த பாடப்பிரிவுகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 23.08.2023 ஆகும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும். அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் (பொ) துரை மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

The post பழநியாண்டவர் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Palaniyandavar College ,for Master ,Palani ,Palani Arulmiku ,Palaniyandavar College of Arts and Culture ,Dinakaran ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு