×

விகேபுரம் அருகே குவைத்திற்கு வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்?

விகேபுரம், ஆக.11: விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (62). இவரது மகன் மணிகண்டன் (24). இவரை கடந்தாண்டு செப். 11ம் தேதி அதே ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் மூலம் ரூ.1.90 லட்சம் செலுத்தி குவைத்தில் டிரைவர் வேலைக்கு அனுப்பிவைத்தார். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செல்போனில் அழைத்தபோதும் மகனை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி நெல்லை கலெக்டர் கார்த்திகேயனிடமும், விகேபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்திடம் இதுகுறித்து மனு அளித்தார். அதில் வெளிநாடு சென்றுள்ள எனது மகனின் நிலை என்னவென்று தெரியவில்லை. முருகேசனை அழைத்து விசாரணை செய்து என் மகனை வெளிநாட்டில் இருந்து மீட்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விகேபுரம் அருகே குவைத்திற்கு வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்? appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Vikepuram ,Kandasamy ,Agasthyarpatti Indira Nagar ,Manikandan ,Mayam ,
× RELATED கோடை காலத்தையொட்டி சிவந்திபுரத்தில்...