×

கோடை காலத்தையொட்டி சிவந்திபுரத்தில் டென்னிஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் விழா

விகேபுரம், ஜூன் 4: கோடை காலத்தையொட்டி சிவந்திபுரத்தில் டென்னிஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. சிவந்திபுரத்தில் ஜெஸி டென்னிஸ் ஸ்கூல் சார்பில் கோடைகாலத்தை முன்னிட்டு 2ம் ஆண்டாக டென்னிஸ் பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமின் நிறைவு விழா சிவந்திபுரம் திரவியக்கனி தலைமையில் நடந்தது. ஜெசி டென்னிஸ் ஸ்கூல் நிறுவனர் அருள்ராஜ் வரவேற்றார். முகாமில் பங்கேற்று பயிற்சிபெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நெல்லை மாவட்ட டென்னிஸ் கழக தலைவர் செய்யது சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இதைத்தொடர்ந்து சமூக உளவியலாளர் மார்க்கஸ், யோகா மாஸ்டர் வீரபாகு, தென்காசி மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் சிவந்திபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பிராங்கிளின், சிவஞானம் ஸ்ரீராம், பழனிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமைப் பயிற்சியாளர் மார்ஷல் நன்றி கூறினார்.

The post கோடை காலத்தையொட்டி சிவந்திபுரத்தில் டென்னிஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Sivanthipuram ,Vikepuram ,Jessie Tennis School ,
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்