×

சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்தது வேதனை அளிக்கிறது. பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anbumani ,Municipal Corporation ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்