×

பழநியில் ஆசிரியையிடம் 6 பவுன் பறிப்பு

பழநி: பழநி டவுன், நடேசன் சந்தை சேர்ந்த சேதுராமலிங்கம் மனைவி மாரியம்மாள் (76). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் நேற்று மாலை கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் உள்ள மருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மாரியம்மாள் பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post பழநியில் ஆசிரியையிடம் 6 பவுன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani ,Sethuramalingam ,Mariammal ,Palani Town, Natesan Market ,Dinakaran ,
× RELATED பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு...