×

செங்குந்தபுரத்தில் 23 நெசவாளிகளுக்கு ரூ.11.5 லட்சம் முத்ரா கடன் எம்எல்ஏ ஆணை வழங்கினார்

 

ஜெயங்கொண்டம், ஆக.9: ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் நேற்று 9வது தேசிய கைத்தறி தினம், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தலைமை வகித்து சிறப்புரையாற்றி 23 நெசவாளிகளுக்கு முத்ரா கடன் தொகை காண ஆணையை வழங்கினார். சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார். விழாவிற்கு கும்பகோணம் சரக கைத்தறித்துறை உதவி இயக்குனர் மோகன், ஜெயங்கொண்டம் நகர் மன்ற துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் செங்குந்தபுரம் புனித வேல் மற்றும் திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கான பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மேலாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர். விழா முடிவில் கைத்தறி அலுவலர் பூபதி நன்றி கூறினார்.

The post செங்குந்தபுரத்தில் 23 நெசவாளிகளுக்கு ரூ.11.5 லட்சம் முத்ரா கடன் எம்எல்ஏ ஆணை வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chengunthapuram ,Jayangondam ,9th National Linen Day ,Chief Minister ,Dr. Artist ,Sengunthapuram ,
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...