×

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை செப்.30க்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: மத்திய குற்றப்புலனாய்வு போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பணம் பெற்றுக்கொண்டு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை ஆரம்பத்தில் இருந்து முழுமையாக இரண்டு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த மே.16ம் தேதி சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலிசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுவாது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசனுதீன் அமனுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர்கள் குப்தா, ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தில் மொத்தம் ஐந்து பிரிவை சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

இதில் முதல் மூன்று பிரிவினரிடம் விசாரித்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படு விட்டது. மீதமுள்ள இரண்டு பிரிவினரிடம் விசாரித்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தான் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் பாலாஜி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரித்த முடிக்க கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசாரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. இருப்பினும் இரண்டு மாதம் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. அதாவது இன்றிலிருந்து (நேற்று) செப்டம்பர் 30ம் தேதிக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு மேல் இந்த விவகாரத்தில் எந்த அவகாசமும் வழங்கப்படாது என நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்தனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை செப்.30க்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: மத்திய குற்றப்புலனாய்வு போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Supreme Court ,CCP ,New Delhi ,Madras Center ,Minister ,Senthil Balaji ,Central Criminal Investigation Police ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...