ராணிப்பேட்டை: இறந்து கிடப்பதாக கருதிய நபர் போலீசார் மீட்க சென்ற போது உயிரோடு எழுந்து அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தவில்லன் படத்தில் ஆற்றில் மிதந்து வரும் கமலஹாசனை உயிரெழுந்து விட்டதாக நினைத்து கொள்வார்கள். ஆனால், கமலஹாசனோ சாகாவரம் பெற்றவராக இருப்பார். அதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கல்லாறு பகுதியில் காலையில் குளிக்க சென்றவர்கள் அங்கே தண்ணீருக்குள் உடைந்து கிடந்த ராட்சத குழாய் ஒன்றில் மனித உடல் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அரக்கோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிக்கு ஆயத்தமாகினர். போலீசார் தண்ணீருக்குள் இறங்கிய போது அந்த உடல் மெல்ல அசைவது போல தோன்றியுள்ளது. தண்ணீர் ஆட்டம் கொடுப்பதால் அசைவதாக நினைத்து அருகே சென்றபோது அதன் உடல் குழாய்குள் இருந்து வெளியே வந்து அமர்ந்தது.
இதனை சற்றும் எதிர்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணை செய்த போலீசார் முதியவர் போதையால் தண்ணீருக்குள் கிடந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சாம்பு என்பதும், கார்நாடக மாநிலத்தை சேர்ந்த அவர் அரக்கோணம் பகுதியில் நண்பருடன் தங்கி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை மருத்துவமனை அழைத்து சென்று முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர்.
The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே ராட்சத குழாயில் மிதந்த சடலம்!.. உயிருடன் எழுந்து அமர்ந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.
