×

பாவகப் பலன்களும் பாவகத் தொடர்பும்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஒரு பாவகம் இயக்கும் பொழுது அல்லது ஒரு பாவகம் இயக்கப்படும் பொழுது எந்த பாவகம் வலிமையாக இருக்கிறதோ அதற்கான பலன்கள் உண்டாகும். மேலும், ஒரு பாவகம் இயக்கப்படும் பொழுதோ அல்லது ஒரு பாவகம் இயங்கும் பொழுதோ மறைமுகமாக மற்ற பாவகங்களும் இயங்கும், ஒரு பாவகம் மட்டும் இயங்குவதில்லை. இதை விரிவாக பார்த்தால், அதன் பொருள் விளங்கும். அனுபவத்தில் இந்த உண்மையை நாம் உணரலாம்.

தாய் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். அப்போது ஐந்தாம் பாவத்திற்கு உரிய தன் குழந்தைக்கு அதற்கு சப்தம ஸ்தானமாக 11-ஆம் பாவம் இயங்குகிறது. அப்படி இயங்கும்பட்சத்தில் அந்த தாயின் ஈடுபாடு ஐந்தாம் பாவம் என்ற தன் குழந்தையின் மீதுதான் அதிகமாக மனோலயப்படும். அங்கே, 11-ஆம் பாவம் இயங்கினாலும் தன் குழந்தை தன்னைவிட்டு பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சமும் சந்தேகமும் அந்த தாயிற்கு உண்டாவது இயல்புதான்.

ஜோதிடராக இங்கு ஒவ்வொரு பாவத்திற்கும் மற்றொரு பாவம் எப்படி மாறுபாடு உண்டாகிறது என்பதே ஒரு ஜோதிடரின் பார்வை பிரச்னைக்கு வருபவர்களும் ஒரு பாவம் மாற்றம் அடையும் பட்சத்தில் மற்றொரு பாவம் மாற்றம் அடையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த முறையில் ஒருவரின் பிரச்னைகளுக்கு பாவத் பாவம் எப்படி வழிவகை செய்கிறது என்பதை பார்ப்போம்.

பாவத் பாவத்தின் தீர்வுகள்

1ஒரு நபர் தீராத நெடுநாட்பட்ட நோயின் காரணமாக தொடர்பு கொள்ளும் போது, அவரின் ஆறாம் பாவம் அவரை தொந்தரவு செய்கிறது என்பதை உணரலாம். ஆறாம் பாவத்தின் அமைப்புகளை ஆராய வேண்டும். அவ்வாறு ஆறாம் பாவம் அவரின் நோய்களுக்கு எந்த அளவு தொடர்பு உள்ளது என்பதை குறித்து அவருடன் பேசும் பொழுது ஏறக்குறைய அவரின் பதில்கள் சரியாக இருக்கும். ஆறாம் பாவம் இயங்கும் பொழுது அவரின் சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய நான்காம் பாவம் (4-ஆம்) கெட்டுப் போகலாம் அல்லது அவரின் ஆறாம் பாவத்திற்குரிய (6-ஆம்) கிரகம் வலிமையாக அமைந்திருக்கலாம்.

ஆறாம் பாவத்தை (6-ஆம்) வலுவிழக்கச் செய்ய வேண்டும் அல்லது நான்காம் பாவத்தின் மூலம் அதற்கான யோசனையை உண்டாக்கலாம். ஆறாம் பாவத்தால் உங்களுடைய நான்காம் பாவம் (4-ஆம்) துன்பப்படும் பொழுது, உங்களின் தாய் மட்டும் அதிக சிரமத்திற்கு ஆளாவார் என்பது நாம் அறிந்ததே. இங்கு உங்களின் சுகம் மட்டும் கெட்டுப் போகவில்லை, உங்களின் தாய் அதற்காக வேதனை அடைவார் என்பது அனுபவ உண்மை.

தீர்வுதான் என்ன? (4-ஆம்) நான்காம் பாவத்திற்கு எட்டாம் பாவகமாக பதினோராம் (11-ஆம்) பாவகம் வருகிறது. மேலும், ஆறாம் (6-ஆம்) பாவகத்திற்கு ஆறாம் பாவகமாக பதினோராம் (11-ஆம்) பாவகம் வருகிறது. ஒருவரின் ஜாதகத்தில் (11-ஆம்) பாவகம் இயக்கப்படும் பொழுது ஜாதகர் சுகம் அடைகிறார். ஆனால், அங்கு பதினோராம் பாவகம் இயங்குவதால் தாயிற்கு ஒரு சுகவீனம் உண்டாகலாம் ஆதலால், அதை தவிர்க்க, நீங்கள் சிறிது காலம் வாகனங்களை ஓட்டாமல் இருப்பது சிறப்பு என்பதுதான் தீர்வாகும்.

வெற்றிக்கான பாவம் பதினோராம் பாவகமாக இருந்தாலும் (11-ஆம்) நீங்கள் உங்கள் சுகத்தை இழந்தால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சுகமும் வேண்டும் வெற்றியும் வேண்டும் என்பது கிடையாது. அதிக உழைப்பால் நீங்கள் சுகத்தை இழந்தால்தான் வெற்றி உண்டு. 2ஒரு நபர் வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்றால் அவருக்கு நான்காம் பாவகம் (4-ஆம்) இயங்க வேண்டும் அல்லது ஏழாம் பாவகம் இயங்க வேண்டும்.

நான்காம் பாவகம் (4-ஆம்) இயங்கினால் வீடு அவரின் பெயரில் இருக்கும். ஏழாம் பாவம் (7-ஆம்) இயங்கினால் அவரின் மனைவி பெயரில் வீடு வாங்கி இருக்க வேண்டும். நான்காம் (4-ஆம்) பாவத்திற்கு நான்காம் பாவகம் ஏழாம் பாவகமாக (7-ஆம்) வரும். பூர்வீக சொத்துகள் யாவும் இந்த பாவத்திற்குள் வராது. பூர்வீக சொத்துகள் ஒருவருக்கு வரவேண்டும் எனில் ஐந்தாம் பாவகத்திற்கு (5-ஆம்) ஐந்தாம் பாவகம் ஒன்பதாம் பாவகம் (9-ஆம்) வலிமையாக இருக்க வேண்டும். அல்லது (9-ஆம்) ஒன்பதாம் பாவாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அந்த பாவாதிபதி வலிமை பெறுவார் என்பதை உணரலாம்.

உங்களுக்கு (4-ஆம்) நான்காம் பாவகம் இயங்கும் பொழுது உங்களின் தகப்பனாருக்கு பிரச்னைகள் வரலாம். நான்காம் பாவத்திற்கு எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் (12ம்) பாவகமாக வரும். இந்த பாவகம் உங்களின் செலவினை குறிக்கிறது. இவ்வுலகில் பிறந்த எவருக்கும் பன்னிரெண்டு பாவகங்களும் சிறப்பாக இருந்ததில்லை. சிறப்பாகவும் இருக்காது. வாழ்வில் ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்பது இயற்கையின் விதி.

The post பாவகப் பலன்களும் பாவகத் தொடர்பும் appeared first on Dinakaran.

Tags : Sivaganesan ,
× RELATED ருசக யோகம்