×

அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு திருமயம் அருகே காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

திருமயம்,ஆக.7: திருமயம் அருகே காளியம்மன் கோயில் ஆடி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஏனப்பட்டி, அரசம்பட்டி கிராமத்தில் ஆவத்தாள் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு ஆடித்திருவிழா நேற்று முன்தினம் கோழி படையல் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், ஜப பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காளியம்மனுக்கு பால்குட அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், லட்சாரிச்சினை விழா உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நேற்று இரவு கோயில் கலையரங்கத்தில் மகமாயி என்னும் புராண நாடகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

The post அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு திருமயம் அருகே காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Aadi festival ,Kaliamman temple ,Tirumayam ,Kaliyamman temple Aadi festival ,Pudukottai District… ,Peace Talks ,Adi Festival ,Kaliyamman Temple ,Thirumayam ,
× RELATED கிணற்றில் மூழ்கி விவசாயி பலி