×
Saravana Stores

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் கொள்ளை

ஈரோடு: ஈரோடு குமலன்குட்டை கணபதிநகரை சேர்ந்தவர் துரைசாமி (74). ஆடிட்டர். இவரது மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வுபெற்ற அரசு கல்லூரி பேராசிரியை. இவர்களது மகள் ஜனனி. பல் மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். துரைசாமி நேற்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். சுப்புலட்சுமி பகல் 11.30 மணியளவில் ஈரோடு நாடார் மேட்டில் தனது கட்டிட பணிகளை பார்வையிட சென்றார். மதியம் சாப்பாட்டிற்காக 2.30 மணியளவில் தம்பதியர் வீட்டிற்கு வந்தனர். அப்போது, பீரோவில் இருந்த 150 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. வீட்டின் பின்பக்கம் சமையல் அறை பின்புற கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. புகாரின்படி ஈரோடு வடக்கு போலீசார், சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அதில் தொப்பி, முக கவசம் அணிந்த மநபர் கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. அவரை தேடுகின்றனர்.

The post ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Erode ,Duraisamy ,Kumalankutta Ganapathy Nagar, Erode ,Subbulakshmi ,Government College… ,Auditor's ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்