×

பொங்கலூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

 

திருப்பூர்,ஆக.5: பொங்கலூர் அருகே திருப்பூர் – தாராபுரம் ரோட்டில் குப்பிச்சிபாளையம் அடுத்த தனியார் கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வாகனம் மோதி அடிபட்டு கிடந்தார். மோதிய வாகனம் குறித்து அடையாளம் தெரியவில்லை. பின்னர் அந்த வாலிபரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பொங்கலூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Pongalur ,Tirupur ,Kuppichipalayam ,Tirupur – Tarapuram ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்