×

73வது பிறந்தநாள் புதுவை முதல்வருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 73வது பிறந்தநாள் விழா என்ஆர் காங்கிரஸ் சார்பில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு நள்ளிரவு முதல் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திரண்டனர். பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார். காலை 8.30 மணிக்கு ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான காசு மாலை அணிவித்தனர். முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி டிவிட்டர் மூலமாக ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஒன்றிய அமைச்சர்களும் முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து கூறினர்.

* ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து’
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பிறந்தநாளில் அவர் என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

The post 73வது பிறந்தநாள் புதுவை முதல்வருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : President ,Puducherry ,Chief Minister ,Rangaswamy ,NR Congress ,Rangasamy ,Puduwa ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்