கோவை, ஆக.3: கோவை தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்காமல் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு பணியிட பயிற்சி அளித்து மாணவர்களின் செயற்முறைக்கல்வியில் பணியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி ஓய்வு வரை பதவி உயர்வு இல்லாத பணியிடத்தில் பணிபுரிந்து வருவதால் 6-வது நிதி குழுவில் வழங்கப்பட்ட தேர்வு நிலையில் தர ஊதியம் ரூ.4,200 உயர்வை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
The post பள்ளி ஆய்வக உதவியாளர்கள் கல்வித்துறை அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.
