×

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் விலையில்லா சைக்கிள்கள்

கிருஷ்ணராயபுரம், ஆக. 2: கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை சிவகாமசுந்தரி எம்எல்ஏ வழங்கினார். கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 49 சைக்கிள்கள், பொரணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 25 சைக்கிள்கள், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 79 சைக்கிள்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 112 சைக்கிள்கள், தம்மாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 42 சைக்கிள்கள் என மொத்தம் 307 சைக்கிள்களை சிவகாமசுந்தரி எம்எல்ஏ மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கன்னியப்பன், ராஜதுரை, ஆறுமுகம், அமலி டைசி, வடிவேல், தான்தோணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் தொகுதியில் விலையில்லா சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram Block ,Krishnarayapuram ,Tamil Nadu government ,Sivakamasundari ,MLA ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...