×

பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேகரித்த நெகிழி பை, பாட்டில்கள்

 

முத்துப்பேட்டை: பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் திட்டத்தில் மாணவர்கள் சேகரித்த நெகிழி பைகள், பாட்டில்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட என்.எஸ்.எஸ் மாணவர்கள் நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு நெகிழி பொருட்களை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று மாணவர்கள் தங்கள் வீடு மற்றும் சுற்று புறங்களில் இருந்த நெகிழி பைகள் மற்றும் ஒரு முறை மட்டும் பயன் படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து மூட்டை கட்டி நெகிழி இல்லா தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ராஜாராம் முன்னிலையில் மாணவர்கள் தாங்கள் சேகரித்து கொண்டு வந்த நெகிழி பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி முதல்நிலை அலுவலர் மோகனிடம் ஒப்படைத்தனர். இதில் வர்த்தக கழக தலைவர் கண்ணன், 10-வது வார்டு கவுன்சிலர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேகரித்த நெகிழி பை, பாட்டில்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Thiruppat ,Thirupupat ,TN ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...