×

ஆடிட்டர் வீட்டில் துணிகர திருட்டு: முகமூடி நபருக்கு வலை

 

சேலம், ஜூலை 31: சேலத்தில் ஆடிட்டர் வீட்டில் புகுந்து, முகமூடி அணிந்த மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் கன்னங்குறிச்சி சந்திரன் கார்டன் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஆடிட்டரான இவர், கடந்த 8ம் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோருடன் வெளி நாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், விக்னேஷ் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக, கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்தால் தான், என்னென்ன பொருட்கள் திருட்டு போனது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகமூடி அணிந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆடிட்டர் வீட்டில் துணிகர திருட்டு: முகமூடி நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...