- புதுவை
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- பெண் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- காரைக்கால்
- ரங்கசாமி
- பெண் மந்திரி
- தின மலர்
![]()
* நள்ளிரவில் மறியல்
* 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
காரைக்கால்: காரைக்கால் அருகே முதல்வர் ரங்கசாமிக்கு பேனர் வைப்பதில் அமைச்சர்- எம்எல்ஏ ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் ஆகஸ்ட் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பெயரில் வாழ்த்து பேனர்கள் வைப்பதிலும், போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டுவதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகனின் ஆதரவாளர்கள், முதல்வர் ரங்கசாமியை வாழ்த்தி பேனர் வைத்தனர்.
அதே பகுதியில் அதே கட்சியை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்களும் வாழ்த்து பேனர் வைத்தனர். இதை எம்எல்ஏ ஆதரவாளர்கள் அகற்றினர். அகற்றிய பேனரை மீண்டும் அமைச்சரின் ஆதரவாளர்கள் வைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி அமைச்சர் சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்கள் சிலரை, திருமுருகன் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தாக்கியதோடு அமைச்சரின் ஆதரவாளர்கள் வைத்து இருந்த பேனரை கிழித்தெறிந்தனர்.
இதைகண்டித்து கோட்டுச்சேரி காவல் நிலையம் எதிரே அமைச்சர் சந்திரபிரியாவின் ஆதரவாளர்கள் 500 பேர் நேற்றுமுன்தினம் இரவு திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் ஆதரவாளரை தாக்கிய திருமுருகன் எம்எல்ஏவின் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இந்த தகவல் அறிந்த அமைச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்ைத நடத்தி, ‘தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தனர்.
இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் திருமுருகன் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் பேனர் கிழிப்பு: பெண் அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்கள் அடிதடி appeared first on Dinakaran.
