×

வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர்: அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் என முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவிடம் ராமநாதபுரம் அருகே பேக்கரும்பில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அவருடைய நினைவிடத்தில் மினொளி மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை அப்துல்கலாமின் குடும்பத்தினர் வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது; “வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர், சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர்: அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கமல்ஹாசன் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,Abdulkalam ,Memorial Day ,Chennai ,Former ,President ,Wan ,Kamalhaasan ,
× RELATED “பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி...