×

அந்தியூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

 

அந்தியூர்,ஜூலை27: அந்தியூரில் உள்ள பள்ளிபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை ஒட்டி கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. இதனை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் துவக்கி வைத்தார். ஆவின் பொது மேலாளர் பேபி தலைமை தாங்கினார். பால்வள துணைப் பதிவாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் மாடுகள்,ஆடு, கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் சிகிச்சைகளும் அளித்தனர்.இதில் குறிப்பாக நோய் தடுப்பூசிகள்,குடற்புழு நீக்கம் செய்தல்,ஆண்மை நீக்கம் செய்தல்,ஸ்கேன் மூலம் மலடு நீக்க பரிசோதனை,சினை பரிசோதனை சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்டவைகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அந்தியூர்,பள்ளிபாளையம்,சந்திபாளையம்,பருவாச்சி,ஆனைக்கல்மேடு,அண்ணா மடுவு, கந்தாம்பாளையம்,குந்துபாயூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. முகாமில் ஆவின் துணைப் பொது மேலாளர் ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல்,உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன்,மருத்துவர்கள் சண்முகம், அர்ஜுனன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

The post அந்தியூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Andhiyur ,Pallipalayam ,Anthiyur ,Andyur ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து