×

ஆங்கில வழிக்கல்விக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

மதுரை, ஜூலை 27: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம், மூட்டா அரங்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் எமிமாள் ஞானசெல்வி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாநில தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும். அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆங்கில வழி பிரிவுகளுக்கு கூடுதலாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். விலையில்லா பொருட்கள் அனைத்தையும் பள்ளிகளுக்கே நேரடியாக விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஆங்கில வழிக்கல்விக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai District Special General Committee Meeting ,Tamil Nadu Primary School Teachers' Alliance ,Moota Arena ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!