×

இன்று கார்கில் வெற்றி தினம்: முப்படை தளபதிகள் மரியாதை

லடாக்: கார்கில் வெற்றி தினத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு, முப்படைகளின் தளபதிகள் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர். இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது. இந்த போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பலத்த அடி கொடுத்தது. அந்த போரை, கார்கில் போர் என்று அழைக்கிறோம். இறுதியாக ஜூலை 26ம் தேதி கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, அங்கு இந்திய தேசியக் கொடியை ராணுவ வீர்கள் நாட்டினர். இந்திய தரப்பில் 543 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருந்தனர்.

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதியை கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று கார்கில் வெற்றி தினத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதிகள் மரியாதை செலுத்தினர். இதேபோன்று வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சீத்தல் ரக 3 ஹெலிகாப்டர்கள் போர் நினைவகம் மீது மலர்களை தூவியபடி பறந்து சென்றன. டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும், கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

The post இன்று கார்கில் வெற்றி தினம்: முப்படை தளபதிகள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Karkil ,Ladakh ,Kargil ,Tras ,Corkill Victory Day ,
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ