×

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.7.13 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

 

அந்தியூர், ஜூலை 26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சிப்பகுதியை சேர்ந்த பாறையூர், தாசநாயக்கன்பாளையம் பகுதிகளில் கான்கிரீட் சாலை வேண்டி பொதுமக்கள் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலத்திடம் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.7.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை பாறையூர், தாசநாயக்கன் பாளையம் பகுதிகளில் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் நாகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், பிரம்மதேசம் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ராஜா, லோகு, ஈஸ்வரன், சக்திவேல், மாசநாயக்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

The post அந்தியூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.7.13 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Tags : Andhiur ,Anthiyur ,Bhikhayur ,Dasanayakanpalayam ,Brahmadesam ,panchayat ,Andyur ,Erode district ,
× RELATED வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து...