×

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு பலி போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூலை 26: குடியாத்தம் அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு பரிதாபமாக பலியானது. குடியாத்தம் அடுத்த சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(74), பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த ஞானகிரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று, திருநாவுக்கரசு தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக பசுமாடு மிதித்துள்ளது. இதில், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கிய பலியான பசுமாடு 9 மாதம் சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு பலி போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Pasumadu ,Kudiyattam ,Gudiatham ,Kudiatham ,Dinakaran ,
× RELATED கோடை மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் குடியாத்தம் அருகே