புதுக்கோட்டை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது; கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எந்தவிதமான சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு இடையூரு செய்ய வேண்டும் என்பதற்காக சிறையில் அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவது போல் மாய தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும், குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கப்படும். மேகதாது அணை விவகாரம் குறித்து ஒன்றிய அமைச்சரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.
