×

மலை கிராமத்திற்கு பேருந்து சோதனை ஓட்டம் ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை வரை

ஒடுகத்தூர், ஜூலை 25: ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு பேருந்து சோதனை ஓட்டம் நடந்தது. ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மலைவாழ் மக்களின் நலனுக்காக போக்குவரத்து வசதியும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று முன்தினம் மாலை ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை மலை கிராமம் வரை புதிய பேருந்து இயக்கப்படுவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post மலை கிராமத்திற்கு பேருந்து சோதனை ஓட்டம் ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை வரை appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Bhinjamanthi ,Odugathur ,Bhinjamantha Hill Village ,Peenchamanthi ,
× RELATED (வேலூர்) கிராம நிர்வாக உதவியாளருக்கு...