×

ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர், எம்எல்ஏ. சஸ்பென்ட்: கூட்ட தொடரில் பங்கேற்க முடியாது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர குத்தா, பாஜ எம்எல்ஏ. மதன் திலாவர் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஒரு மசோதா மீதான விவாதத்தின் போது, ராஜஸ்தானிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அரசை விமர்சித்து பேசிய பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம மேம்பாடு துறை இணையமைச்சர் ராஜேந்திர குத்தாவை முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், நேற்றைய கூட்டத்துக்கு வந்த குத்தா, அவையில் நுழைந்த உடன் சபாநாயகர் சி.பி. ஜோஷியின் இருக்கைக்கு சென்று சிகப்பு நிற டைரியை காட்டி, அது குறித்து பேச அனுமதிக்கும்படி கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், சேம்பரில் வந்து தன்னை பார்க்கும்படி கூறினார். இதனிடையே, பாஜ எம்எல்ஏ. டைரி ஒன்றை காட்டியபடி கூச்சலிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, குத்தா தன்னை தாக்க வந்ததாகவும் மைக்கை உடைத்ததாகவும் தாரிவால் தெரிவித்திருந்தார்.

The post ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர், எம்எல்ஏ. சஸ்பென்ட்: கூட்ட தொடரில் பங்கேற்க முடியாது appeared first on Dinakaran.

Tags : MLA ,Rajasthan Cabinet ,Jaipur ,Rajendra Gutta ,BJP ,Rajasthan ,Madan Dilawar… ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...