சமயபுரம்: மண்ணச்சநல்லூர் அருகே குடும்பத்தகராறில் கணவன் திட்டியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குண்ணாக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மோகன்ராஜ் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் இரவு மனைவி சமைக்கவில்லை என கணவர் மோகன்ராஜ் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா அன்றிரவு வீட்டில் கணவர் தூங்கிய பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலை மோகன்ராஜ் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
The post மண்ணச்சநல்லூர் அருகே கணவன் திட்டியதால் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.
