×

என்ஐஏ சோதனை ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ மாநில தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனையானது ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை : எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டது. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒன்றிய அரசின் ஏவல் நடவடிக்கையாகும்.

எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஒன்றிய அரசு தனது ஏவல்துறையான என்.ஐ.ஏ. மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஒரு தெளிவான, வெளிப்படையான மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வீட்டில் நடைபெற்றுவரும் இத்தகைய சோதனை நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நடைபெற்றுவரும் இத்தகைய அடக்குமுறைகளை சட்டரீதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post என்ஐஏ சோதனை ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : NIA ,Union government ,S. TD GP GI ,Chennai ,STBI ,N. GI PA ,TD GP GI Party ,TD GP GI ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...