சென்னை: சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட சிறப்பு முகாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சி, மண்டலம்-4, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை (22ம் தேதி) நடைபெற இருந்த ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட சிறப்பு முகாம் நிர்வாக காரணத்தினை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மக்களை தேடி மேயர் முகாம் தள்ளிவைப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.
