சத்தியமங்கலம், ஜூலை 19: சத்தியமங்கலம் பகுதியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், காவல்துறை சார்பில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் நேற்று சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்ததோடு வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை எச்சரித்தனர். இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நீர்வள ஆதாரத்துறை நோட்டீஸ் சத்தியமங்கலத்தில் வாகன சோதனையில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் கருவிகள் பறிமுதல் appeared first on Dinakaran.
