×

திருப்புவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்

சிவகங்கை, ஜூலை 19: திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய, நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரை மீண்டும், மீண்டும் பேசக்காரணம் இனத்தின் மீட்சியே, மொழியின் மாட்சியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, யூனியன் சேர்மன் சின்னையா, நகர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர். நாஞ்சில் சம்பத் பட்டிமன்ற சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர் கதிர்.ராஜ்குமார், மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொற்கோ, முகமதுமகாதீர், பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி உறுப்பினர்கள் செல்வி ரவி, ராமலெட்சுமி பாலகிருஷ்ணன், மாரிதாசன், பத்மாவதி முத்துக்குமார், சித்ராதேவி ஆறுமுகம், வேல்பாண்டி, ஜனதாசெல்வ பிரகாஷ், கண்ணன், பாலகிருஷ்ணன், கமிதாபானு ஷேக்முகமது மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post திருப்புவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Centenary Festival ,Tirupuvanam ,Sivagangai ,West Union ,DMK ,Tiruppuvana ,
× RELATED ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை...