×

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை!!

சிவகங்கை: ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஆட்டுச் சந்தைகளில் விற்பனை களைகட்டியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தை களைகட்டியது. ரம்ஜான் பாண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்தனர். 10,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விறபனையாகின. காலை முதலே ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்ய குவிந்தனர். இதில் சிறியரக ஆடுகள் ரூ.5,000க்கும், பெரியரக ஆடுகள் சுமார் ரூ.50,000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி ஒருபக்கம் இருந்தாலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை!! appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Sivagangai ,Tirupuvanam ,Tamil Nadu ,Sivagangai district ,Tiruppuvana ,Madurai ,Ramanathapuram ,Pudukottai ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.