×

ஒன்றிய அரசு அவசர சட்டம் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு: பெங்களூர் கூட்டத்தில் ஆம்ஆத்மி பங்கேற்குமா?

புதுடெல்லி: டெல்லி சேவைகள் சட்டம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் திடீர் ஆதரவு தெரிவித்து உள்ளது. டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆதரவை கெஜ்ரிவால் கோரினார். ஆனால் காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை. இதனால் பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கெஜ்ரிவால் வருகை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் நேற்று கருத்து தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் பொறுப்புகள் மீதான மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக எப்போதும் காங்கிரஸ் போராடி வருகிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து எதிர்ப்போம். இந்த தாக்குதல் நேரடியாக வருகிறது. நாங்கள் இதை தொடர்ந்து எதிர்ப்போம். இந்த விவகாரத்தில் வேறு கேள்விக்கு இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசு அவசர சட்டம் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு: பெங்களூர் கூட்டத்தில் ஆம்ஆத்மி பங்கேற்குமா? appeared first on Dinakaran.

Tags : Congress ,Kejriwal ,Bangalore ,New Delhi ,IPS ,Delhi ,Amadmi ,
× RELATED நான் சிறை சென்றாலும் ஜனநாயகம்...