×

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி இருகூர் மகளிர் அரசு பள்ளி அணி கோப்பையை வென்றது

 

கோவை, ஜூலை 15: உடற்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான 13ம் ஆண்டு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, விளாங்குறிச்சியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியில் நடைபெற்றது. 19வது வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் பிரிவில் 40 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டன. மாணவர்கள் பிரிவில், அகர்வால் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஏபிசி பள்ளி அணி இரண்டாம் இடமும், பேர்க்ஸ் பள்ளி அணி மூன்றாம் இடமும், ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளி அணி நான்காம் இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் இருகூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஏபிசி பள்ளி அணி இரண்டாம் இடமும், சபர்பன் பள்ளி அணி மூன்றாம் இடமும், ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளி அணி நான்காம் இடமும் பிடித்தது.

The post மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி இருகூர் மகளிர் அரசு பள்ளி அணி கோப்பையை வென்றது appeared first on Dinakaran.

Tags : Irkur Girls Government School ,Coimbatore ,Department of Physical Education ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...